Rock Fort Times
Online News

மணிப்பூர் சம்பவம் : காங்கிரஸ் வழக்கறிஞா்கள்  பிரிவு கண்டன ஆர்ப்பாட்டம்…

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சி கோர்ட் முன்பு காங்கிரஸ் வழக்கறிஞா்கள் பிரிவு சார்பில் மாவட்ட தலைவர் வழக்கறிஞா்  செந்தில்நாதன் தலைமையில் இன்று  ( 22.07.2023 ) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது .இதில் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞா்  சரவணன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞா்  ராஜேந்திரகுமார், மாநில பொது செயலாளர் கிருபாகரன், மகளிர் அணி சிவகாமி, மோகனா மற்றும் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், மலைக்கோட்டை முரளி, சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்