திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வட்டாட்சியர் அலுவலகம், மகளிர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம், சார் நிலை கருவூலம், சார் பதிவாளர் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம் ஆகியவை ஒரே இடத்தில் அமைந்துள்ளது. அந்த அலுவலகங்களின் வளாகத்தில் அதிகார விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த சில மாதங்களாக மூதாட்டி ஒருவர் இருந்து வந்தார். ஆதரவற்ற அந்த மூதாட்டிக்கு அங்கு வருபவர்கள் உணவு தருவார்கள். சிலர் காசும் கொடுப்பார்கள். அப்படி வசித்து வந்த மூதாட்டி இன்று ( 26.09.2023 ) காலை இறந்து கிடந்தார். அவரது உடலில் ஈக்கள் மற்றும் எறும்புகள் மொய்த்தன. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள போலீசார் மற்றும் முன்னாள் ராணுவ வீரரான ஜி.என்.ஆர்.ஸ்ரீதருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து விசாரித்த போது அந்த மூதாட்டி மணப்பாறை அண்ணா நகரைச் சேர்ந்த சரஸ்வதி (வயது 80) என்பதும், அவருக்கு மகன் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் ஆதரவற்ற நிலையில் இருந்த மூதாட்டிக்கு ஜி.என்.ஆர்.ஸ்ரீதரன் புது சேலை அணிவித்து உடலை மீட்டு இடுகாட்டிற்கு
தகனம் செய்ய எடுத்துச் சென்றார். இறந்த மூதாட்டியின் அருகே ஒரு சாமி உள்ளது. அந்த சாமிக்கு அருகில், இறந்த மூதாட்டி 50 ரூபாய் நோட்டை கடைசியாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இறப்பதற்கு முன்பு கூட சாமிக்கு பணம் வைத்த நிலையில் இறந்திருந்தது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 950
Comments are closed, but trackbacks and pingbacks are open.