Rock Fort Times
Online News

போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்றவர் கைது…

புதுக்கோட்டை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 52). இவர் நேற்று திருச்சியில் இருந்து மலேசியா செல்ல விமான நிலையத்திற்கு வந்தார். அவரது பாஸ்போர்ட் மற்றும் உடைமைகளை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும், பாஸ்போர்ட்டில் உள்ள தகவல் குறித்து அவரிடம் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் தன்னுடைய ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை மாற்றி போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து முருகானந்தத்தை திருச்சி விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விமான நிலைய போலீசார் முருகானந்தத்தின் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்