திருச்சி மாநகராட்சி ஓயாமரி எரிவாயு தகன மையத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சீர் செய்யும் பணிகள் 30.08.2023 முதல் 07.09.2023 வரை மேற்கொள்ளப்படுகிறது. அந்த நாட்களில் சடலங்களை தகனம் செய்யும் பணி மேற்கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஓயாமரி நவீன எரிவாயு தகன மையம் தற்காலிகமாக மூடப்படுகிறது. அதற்கு பதிலாக ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரில் உள்ள நவீன எரிவாயு தகன மையத்தினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்கண்ட தகவலை திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.