Rock Fort Times
Online News

துவரங்குறிச்சி அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளையர்கள் கை வரிசை..! 7 பவுன் நகை ரூ.40 ஆயிரம் கொள்ளை..!

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த கொண்டையம்பட்டி யைச் சேர்ந்த சத்தியமூர்த்தி -45 மற்றும் பரமேஸ்வரன் -50 ஆகிய இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்று சென்றுவிட்டனர்.இந்த நிலையில் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் காலை எழுந்து பார்த்த போது இருவரது வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்தபடியே கிடந்துள்ளன. உடனடியாக சத்தியமூர்த்தி மற்றும் பரமேஸ்வரன் ஆகியோருக்கு இது குறித்து தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். மேலும் கொண்டையம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் பாண்டுரங்கன் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்கு உறங்கச் சென்று விட்டார். மீண்டும் காலை எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து மூவரும் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மூன்று வீடுகளிலும் மொத்தமாக 7 பவுன் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் திருடுபோயுள்ளது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்