Rock Fort Times
Online News

மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரான பி எம்.மன்னன் அதிமுகவில் இணைந்தார் !

மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும், 2006–2011 காலகட்டத்தில் மதுரை மாநகராட்சி துணை மேயராக இருந்த பி.எம். மன்னன், தனது ஆதரவாளர்களுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனான அழகிரி மதுரை அரசியலை நீண்ட காலமாக கட்டமைத்தவர். திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் அவரது ஆதரவாளர்கள் வலுவான இருந்தனர். கருணாநிதி மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் தான் அரசியல் வாரிசு என்பதை உணர்ந்த பல திமுக புள்ளிகள் ஸ்டாலின் பக்கம் சாய்ந்தனர். மேலும் அழகிரி மற்றும் அவரது சில ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்களில் பி.எம்.மன்னனும் ஒருவர். இந்நிலையில் இன்று(17-02-2026) சென்னை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள எடப்பாடி கே. பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் பி.எம்.மன்னன் அதிமுகவில் இணைந்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்