துாத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சோரீஸ்புரம் பகுதியில் வழக்கறிஞா் முத்துக்குமாா் மா்ம நபா்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளாா். பணிகளை முடித்துவிட்டு சோரீஸ்புரத்தில் உள்ள தனது வீட்டிற்க்கு காாில் வந்த போது அங்கு மறைந்திருந்த ஆறு போ் கொண்ட கும்பல் சரமாாியாக வழக்கறிஞா் முத்துக்குமாரை கொலை செய்துள்ளனா். சோரீஸ்புரம் பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனைத்தொடா்ந்து சம்பவ இடத்திற்க்கு வந்த காவல்துறையினா் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக துாத்துக்குடி அரசு மருத்துவக்கல்லுாாி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வழக்கறிஞா் முத்துக்குமாா் கொலை செய்யப்பட்து தொடா்பாக மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் தலமையிலான காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
