நடராஜர் கோயிலுக்கு வருகை தந்த கவர்னருக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் கும்ப மரியாதை அளித்தனர். கவர்னர் வருகையையொட்டி கடலூர், சிதம்பரம் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மகா சிவராத்திரியையொட்டி சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா சிதம்பரத்தில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இறுதி விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். இந்நிலையில் இன்று காலை சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடும்பத்துடன் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது மனைவி லட்சுமி ரவி மற்றும் உறவினா்களும் சாமி தரிசனம் செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.