Rock Fort Times
Online News

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில் பங்குனித் தேரோட்டம்- திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்…!

திருச்சி மாவட்டம் லால்குடியில் பிரசித்தி பெற்ற சப்தரிஷீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இக்கோவிலில் பங்குனித் திருவிழா மார்ச் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு சோமாஸ்கந்தர் புறப்பாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை தினசரி காலை பல்லக்கு புறப்பாடும், இரவு 7 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் புறப்பாடும், திருவீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் 9-ம் நாளான இன்று(23-03-2024) காலை தேரோட்டம் நடந்தது. கலை நயமிக்க 75 அடி உயரமுள்ள பழமையான மரத்தாலான தேரில் சுவாமி எழுந்தருள தேரோட்டம் நடந்தது. கோவில் இணை ஆணையர் லக்ஷ்மணன், லால்குடி நகர்மன்ற தலைவர் துரை மாணிக்கம், நகராட்சி ஆணையர் குமார், துணைத் தலைவர், ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சிவசிவ கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நித்யா மற்றும் பணியாளர்கள், பக்த பிரமுகர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் லால்குடி காவல்துறையினர் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

 

 

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்