ஊர் உலகத்தில் உள்ள ஜெகஜால கில்லாடிகளை எல்லாம் பார்த்தவர் அமைச்சர் கே.என்.நேரு. அவருக்கே சமீபத்தில் விபூதி அடித்துள்ளார் லால்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் த.பாரிவள்ளல். 4 முறை இத்தொகுதியில் வென்று எம்.எல்.ஏ ஆன செளந்திரபாண்டியனுக்கு நான் தான் மாற்று என மந்திரி நேருவை ஏமாற்றி வாய்ப்பு வாங்கிய வேட்பாளர் த.பாரிவள்ளல், எலெக்சன் செலவுக்கு ஐந்துக்கும் பத்துக்கும் கூட அடுத்தவரிடம் கையேந்தி நிற்கும் நிலையிலேயே தற்போது இருக்கிறாராம். பூத் கமிட்டி உள்ளிட்ட தேர்தல் செலவுக்கு கட்சிக்காரர்கள் பணம் கேட்டால், என்னுடைய பேங்க் அக்கவுண்டில் கேஷ் இருக்கிறது. ரொக்கமாக தர முடியவில்லை. விரைவில் ஏதாவது ஒரு வழி உருவாக்கி பணத்தை கொடுத்து விடுகிறேன் என ஏகத்துக்கும் சீன் போடுகிறாராம். ஆனால் உண்மை என்னவென்றால் வேட்பாளர் பாரிவள்ளலிடம் மருந்துக்குகூட பணம் இல்லையாம். தனக்கு தெரிந்தவர்களை எல்லாம் கூப்பிட்டு எலெக்சன் செலவுக்கு பணம் இல்லை, எப்படியாவது ஏற்பாடு செய்து தாருங்கள், வேண்டுமெனில் சொத்து டாக்குமென்ட் கூட தருகிறேன் என வட்டிக்கு பணம் கேட்டு கெஞ்சி வருகிறாராம். சரி சொத்துபத்திரம் தாங்க பணம் வாங்கிதருகிறேன் என கூறும் தனது நண்பர்களிடம், செக் தருகிறேன், டாக்குமென்ட் இல்லாமல் பணம் வாங்கி தாங்க என மாற்றி,மாற்றி பேசிவருகிறாராம் வேட்பாளர் பாரிவள்ளல். எலெக்சன் வரைக்கும் இவர் இப்படியே பேசி, பேசி செலவு செய்யாமல் ஜெயிக்க பார்க்கிறாருங்க என உள்ளூர் உடன்பிறப்புகள் பேச தொடங்கி விட்டார்கள்.

Comments are closed.