திருப்பத்தூர் மாவட்டம் தர்மபுரி ரயில்வே மேம்பாலம் அருகில் ரயில் தண்டவாளத்தில் இளைஞாின் சடலம் இருப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினா் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில், அவர் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த தினகரன் மகன் டிஜித் என்பது தொியவந்தது. இவா் பிஎஸ்சி நர்சிங் இறுதி ஆண்டு பெங்களூரில் உள்ள ஸ்ரீ விஷ்ணு நேஷனல் நர்சிங் கல்லூரியில் படித்து வந்ததாகவும், அவர் சொந்த ஊரான கேரளாவிற்கு செல்ல எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்தபோது எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உடலை மீட்ட ரயில்வே காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.