Rock Fort Times
Online News

கரூர் அதிமுக பிரமுகர் அன்புநாதன் கைது.

 

  கரூர் மாவட்டம், அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கும் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் கடந்த பல ஆண்டுகளாக பண பரிமாற்றம் இருந்துவந்துள்ளது. பிரகாஷ் கடந்த 2018 ஆம் ஆண்டில் அன்புநாதனுக்கு 1 கோடி ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. பைப் கம்பெனி நடத்தி வரும் அதிமுக பிரமுகர் அன்புநாதன், தனது நிறுவனத்தில் பங்குதாரராக இணைத்துக் கொள்வதாக கூறி, மேலும் பிரகாஷிடம் கடந்த 2020ஆம் ஆண்டு 2 கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தைப் பெற்றுக் கொண்ட அன்புநாதன் நாட்கள் கடந்தும், அவரது நிறுவனத்தில் பிரகாஷை பங்குதாரராக இணைத்துக் கொள்ளாத காரணத்தால், பிரகாஷ் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு, கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அன்புநாதன் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க முடியாது என்று பிரகாஷை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், இன்று அதிமுக பிரமுகர் அன்புநாதன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்ப்பட்டாா். இதனால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்