முன்னாள் முதல்வர், முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு ஆணைக்கிணங்க திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி தலைமையில், மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவின் உருவச்சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் முத்து செல்வம், மாநகர துணை செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா. அந்தநல்லூர் கதிர்வேல், அந்தநல்லூர் சேர்மன் துரைராஜ், பகுதி செயலாளர்கள் நாகராஜன், கமால் முஸ்தபா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் பவுல்ராஜ், முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்க்கா தேவி, ஆண்டாள் ராம்குமார், மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் மணிவண்ண பாரதி, துபேல் அகமது மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கருணாநிதியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 949
Comments are closed.