திருச்சியில் கருணாநிதி நூற்றாண்டு கொடியேற்று விழா- ஆய்வரங்கம்…!
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு கொடியேற்று விழா மற்றும் ஆய்வரங்கம் நாளை ( 22.08.2023 ) மாலை 5 மணிக்கு ஆர்.எஸ்.வி. திருமண மண்டபம், ஓ.எப்.டி. வளைவு அருகில் குண்டூரில் நடைபெறுகிறது. கல்வெட்டை திறந்து வைத்து, தி.மு.க. கொடியேற்றி ஆய்வரங்கத்தை கழக பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி. மற்றுமு் திமுக முதன்மை செயலாளா் அமைச்சா் கே.என்.நேரு ஆகியோா் தொடங்கி வைக்கின்றனர். கலைஞர் கருணாநிதி வாழ்நாள் சாதனைகள் குறித்த ஆய்வரங்கத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். இந்த நிகழ்வில் மாவட்ட, மாநகர, மாநில நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர,பேரூர், கிளை, வட்ட, வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.