Rock Fort Times
Online News

கருணாநிதி நூற்றாண்டு விழா: தி.மு.க.சார்பில் நலிந்த நெசவாளர்களுக்கு உதவி..

முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை  முன்னிட்டு  திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகரம் சார்பில் எடத்தெரு ஜெபமாலை மாதா மக்கள் மன்றத்தில் நலிந்த நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் சுந்தர்ராஜன் , மாநகர அமைப்பாளர் பெஞ்சமின் ஆகியோர் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், திருச்சி மாநகர செயலாளர் மு.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு நலிவுற்ற நெசவாளர்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினர். இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன் , மாநகர துணைச் செயலாளர் சந்திரமோகன், பகுதி செயலாளர் ராஜ்முகம்மது, ஒன்றிய செயலாளர் ஸ்ரீரங்கன், நெசவாளர் அணி நிர்வாகிகள் நீலமேகம், நவமணி, சுந்தர்ராஜ், சோழராசன், ரங்கசாமி, வெற்றிவேல், முத்துக்குமரன், சண்முகம், ஸ்ரீதர், பாலசுப்பிரமணியம், ஹரிபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்