கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் பாிசுகள் வழங்கினாா்.
தி.மு.க. முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்- அமைச்சருமான மறைந்த மு.கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி தமிழகம் முழுவதும் ஓராண்டு சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பொதுக்கூட்டங்கள், ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், விளையாட்டு போட்டிகள், இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் போன்றவை சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி, தெற்கு மாவட்டம் முழுவதும் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணனின் ஏற்பாட்டில், மின்னொழியில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாநகரத்திற்கு உட்பட்ட 72 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. போட்டியினை கடந்த 26-ம் தேதி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

போட்டியானது 27, 28, 29, ஆகியதேதிகளில் நடைபெற்றது .இறுதிச்சுற்று நேற்று ( 29.06.2023 ) நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முறையே முதல் பரிசு :வார்டு எண் 34 J.சில்வியா நெப்போலியன் அணியினர், இரண்டாம் பரிசு : வார்டு எண்:17A R.M.சுப்பிரமணி அணியினர் , மூன்றாம் பரிசு வார்டு எண் 34A டி.கருணாநிதி அணியினர், நான்காம் பரிச வார்டுஎண்: 37 R.விஸ்வநாதன் , ஆட்ட நாயகன் வார்டு எண் 34 சன் ராஜ்குமார், தொடர் நாயகன் வார்டு எண் 17A புலிதேவனிா்க்கும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் திருச்சி மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் வழங்கினா். இந்நிகழ்வில் மாநகரக் கழக நிர்வாகிகள் சந்திரமோகன், பொன்செல்லையா, சரோஜினி, நூர்கான், தமிழ்ச்செல்வன், பகுதி கழகச் செயலாளர் பாபு, மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.