Rock Fort Times
Online News

காஞ்சிபுரத்தில் பெண் போலீசுக்கு சரமாரி கத்திக்குத்து: கணவர் கைது…!

காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் போலீசை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- காஞ்சிபுரம் மாவட்டம், சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் டில்லிராணி (31). இவர் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் மேகநாதன். கணினி உதிரிபாகங்கள் விற்பனையாளர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பெண் போலீஸ் டில்லிராணி பணி முடிந்து, காஞ்சிபுரம் சாலைத்தெரு அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது கணவர் மேகநாதன், டில்லி ராணியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆத்திரமடைந்த மேகநாதன், தான் வைத்திருந்த கத்தியால் டில்லிராணியை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதில் பல இடங்களில் டில்லி ராணிக்கு காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து டில்லிராணியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மேகநாதனை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் மேகநாதன் கைது செய்யப்பட்டார். புதுச்சேரியில் இருந்து காஞ்சிபுரம் நீதிமன்றத்திற்கு சரணடைய வந்த அவரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்