Rock Fort Times
Online News

காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் வெடி விபத்து 8பேர் பலி மேலும் பலர் கவலைக்கிடம் ! (படங்கள்)

காஞ்சிபுரம் ஓரிக்கை அடுத்த குருவிமலை வளத்தோட்டம் பகுதியில் கடந்த 20வருடங்களுக்கு மேலாக நரேந்திரன் ஃபயர் ஒர்க்ஸ் எனப்படும் பட்டாசு உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது.இங்கு திருவிழாவிற்கான பட்டாசுகள் உள்ளிட்ட பட்டாசுகள் தயாரிக்கபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று வழக்கம் போல் இந்த குடோனில் 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்த நிலையில் இந்த பட்டாசு குடோனில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து இது குறித்து தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் இந்த வெடி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதுவரையில் சுமார் 10த்திற்குக் மேற்பட்டோர் மீட்கப்பட்டு தீக்காயங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்
இது வரையில் இரு பெண் உட்பட 8 பேர் இந்த வெடி விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மேலும் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வெடி விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெடி விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல எண்ணிக்கை அதிகம் ஆகலாம் என தெரிகிறது

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்