மண்ணச்சநல்லூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்… !
முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கீழப்பட்டி மற்றும் சிறுகுடி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாக்களுக்கு, நகரத் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள்
நல்லசேகர், பூபாலன், மாவட்ட பொதுச்செயலாளர் தண்டபாணி, வட்டாரத் தலைவர் ரவிசங்கர், பஞ்சாயத்து தலைவர்கள் கண்ணன், ராஜமாணிக்கம்,
இளைஞர் காங்கிரஸ் வட்டார தலைவர் வி.எம்.கே.மூர்த்தி, நகரப் பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.முகமது மொய்தீன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பென்சில், பேனா இனிப்பு ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் ,ஆர்.டி.ஐ. மாவட்ட நிர்வாகி முகுந்தன், ஐஎன்டியூசி மாவட்டத் தலைவர் விஜயகுமார், இளைஞர் காங்கிரஸ் கோபி, பேரூராட்சி கவுன்சிலர் குரு மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், கீழப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments are closed.