Rock Fort Times
Online News

 திருச்சியில் பெண்ணிடம்  நகை பறிப்பு…

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ். காலனி விவேகானந்தர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். பைண்டிங் தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 56) இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு   சென்றபோது,  அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து முத்துலட்சுமி எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் செய்தார்.  அவா் அளித்த  புகாாின்  பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்