தென்னிந்தியாவின் முன்னணி தங்க நகை தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஜூவல் ஓன் தங்க, வைர நகை கண்காட்சியை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெமினா ஹோட்லில் தொடங்கியது. ராக்போர்ட் டைம்ஸ் வார இதழின் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர்.லெக்ஷ்மி நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி கண்காட்சி அரங்கை திறந்துவைத்ததோடு, குத்துவிளக்கேற்றி சிறப்பித்தார். தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களான கலைவானி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் ராதா, லயன்ஸ் சங்கத்தின் பொருளாளர் மோகன்ராஜ், தேசியக்கல்லூரியின் இயற்பியல் துறைத்தலைவர் ஜெயராமன், தொழிலதிபர்கள் ஐயப்பன், ஜோய் கிறிஸ்டி,மரிய ரோஜா, பத்மாவதி, விஜயா, ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றினர். ஜுவல் ஒன் ஜூவல்லரியின் திருச்சி கிளை துணை மேளாளர் ஜெ.ஆனந்த் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்றார். மண்டல துணை மேலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் தங்கநகை கண்காட்சி குறித்து எடுத்துரைத்தார்.
அப்போது அவர் பேசும்போது., சுமார் 8 ஆயிரம் பேர் பணியாற்றும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய தங்க மற்றும் வைர நகைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம் ஜூவல் ஒன். கிட்டத்தட்ட 3 லட்சம் மாடல்களில் தங்க நகைகள் எங்களிடம் இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் 500 புதுப்புது டிசைன்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. வெகு விரைவில் ஜூவல் ஒன் தனது 13வது கிளையை திருச்சியில் தொடங்கவுள்ளது.
அதற்கான முன்னோட்டம் தான் இந்த தங்க மற்றும் வைர நகை கண்காட்சி. இன்றும் (செப்.28) நாளையும் நடைபெறும் இக்கண்காட்சியில் ஏராளமான டிசைன்களில் தங்க, வைர நகைகளை வாடிக்கையாளர்கள் பார்வையிடுவதோடு சிறப்பு சலுகைகளோடு வாங்கியும் செல்லலாம் என்றார்.முடிவில் திருச்சி கிளை மேலாளர் பிலிப்ஸ் நன்றி கூறினார். தங்கம், வைரம் மற்றும் வெள்ளி பொருட்களுக்கென தனித்தனியாக பிரத்தியேக ஸ்டால்களில் நகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. தங்கம் மற்றும் வைர நகைகள் மீது ஆர்வமுள்ளவர்கள் தாராளமாக இங்கு வந்து வாங்கி மகிழலாம்.
Comments are closed.