Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டம் திருப்பைஞ்சீலி, மூவானூர் பகுதிகளில் ஜன. 23-ம் தேதி மின்தடை…!

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மூவானூர், திருப்பைஞ்சீலி உள்ளிட்ட பகுதிகளில் ஜனவரி 23ம் தேதி( வியாழக்கிழமை) மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக ஸ்ரீரங்கம் கோட்டச் செயற்பொறியாளர் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேங்கைமண்டலம் துணை மின் நிலையத்தில் வருகிற 23ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மூவானூர், வேங்கைமண்டலம், தண்ணீர்பந்தல், மேல, கீழக்கண்ணுக்குளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துறை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், நெ.2 கரியமாணிக்கம், வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, காணக் கிளியநல்லூர், ஈச்சம்பட்டி, மூவராயன்பாளையம், கவுண்டம்பட்டி, பழையூர், செங்குளிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பைஞ்சீலி, பூனாம்பாளையம், திருவெள்ளறை, புலிவலம், திருத்தலையூர், நல்லயம்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்