Rock Fort Times
Online News

நிலவில் பிளாட்டினம் இருக்கிறதா?- இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் பதில்…!

இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தெற்கு கோபுர வாயில் வழியாக வருகை தந்த அவர் கருடாழ்வார் சன்னதி, மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு, கோவில் அர்ச்சகர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு பெருமாள் சந்தன அபயஹஸ்தம் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து சந்திரயான் 4 மற்றும் 5க்கு அரசு அங்கீகரித்துள்ளது. அதற்காக பெரிய ராக்கெட் தயார் செய்யப்பட்டு வருகிறது.அதற்கு NGLV ( Next Generation Launch Vehicle) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பாக நான் ஓய்வு பெற்று விட்டேன். இருப்பினும் இஸ்ரோ பேராசிரியராக வேலை செய்து வருகிறேன். ஆந்திர மாநிலத்திற்கு ஸ்பேஸ் அட்வைசராக இருக்கிறேன். இளம் ஆராய்ச்சியாளர்கள் இஸ்ரோவில் சேர்வதற்கு மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள். இளம் ஆராய்ச்சியாளர்கள் நன்றாக தயாராகி இஸ்ரோவுக்கு வாருங்கள் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இஸ்ரோவில் மட்டுமல்ல தனியார் ஆராய்ச்சி மையத்திலும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. சுனிதா வில்லியம்சிக்கும், இந்தியாவிற்கும் உள்ள தொடர்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை பிரதமர் இந்தியாவிற்கு அழைத்துள்ளார். நாங்களும் அவருக்கு எக்ஸ் தளம் மூலமாக அழைப்பு விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து நிலவில் பிளாட்டினம் இருப்பதாக ஒரு தகவல் பரவுகிறது உண்மையிலேயே இருக்கிறதா? என்ற செய்தியாளர் கேள்விக்கு, நிலவில் பிளாட்டினம் ஒன்றும் இல்லை. அதையும் தாண்டி நிறைய இருக்கிறது, அதனை ஆராய்ச்சி செய்வதற்காக நாம் தொடர்ந்து வேலை பார்த்து வருகிறோம் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்