நாடாளுமன்ற மாநிலங்களவையில்மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்கும் திட்டம் தொடர்பாகவும், அந்த திட்டத்தினால் ஊழியர்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம், பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் மத்திய அரசு ஊழியர்கள், மத்திய சிவில் சேவைகள் (ஓய்வூதியம்) விதிகள், 2021 மற்றும் அனைத்திந்திய சேவைகள் (இறப்பு-ஓய்வுப் பலன்கள்) விதிகள்,1958 ஆகியவற்றின் கீழ் முன்கூட்டியே விருப்ப ஓய்வு பெற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.