தமிழகத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் மேற்கொள்ளப்படும் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணி நியமனம், முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் தகுதி அடிப்படையில் நடைபெற்று வருகிறது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. செவிலியர் பணி தேர்வு மற்றும் பணி நியமனத்திற்காக விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பணம் அல்லது ஏதேனும் ஆதாயத்தைப் பெற்றுக்கொண்டு பணி நியமனத்தில் தலையிட முடியும் எனக் கூறும் தனிநபர்கள் அல்லது இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என்றும், அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் ஏதேனும் கவனத்திற்கு வந்தால், 87544 48477 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அனைவருக்கும் நியாயமான மற்றும் வெளிப்படையான நியமன செயல்முறை நடைபெறுவதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Comments are closed.