Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி சுயேட்சை கவுன்சிலர் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் !

2004 ஆம் ஆண்டு முதல், விஜயகாந்தின் தேமுதிக கட்சியில் அடிப்படை உறுப்பினராக எல் ஐ சி சங்கர் இருந்து வருகிறார். அக்கட்சி சார்பில் ஒருமுறை திருச்சி மாநகராட்சி கவுன்சிலராகவும் பணியாற்றி உள்ளார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியின் 20 வது வார்டு பகுதியில் சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றார் எல்ஐசி சங்கர்.

இந்நிலையில் இன்று, திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் கவுன்சிலர் சங்கர், தனது ஆதரவாளர்கள் 50 பேருடன், தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இந்நிகழ்வில் மாநகர திமுகழக செயலாளர் மதிவாணன், மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்