Rock Fort Times
Online News

ராக்போர்ட் டைம்ஸ் வார இதழின் திருவெறும்பூர் தாலுகா நிருபர் எஸ்.ரமேஷின் தாயார் திருவுருவப்பட திறப்பு விழா

திருச்சி பெல் முன்னாள் தொழிற்சங்க தலைவர் காலம்சென்ற சாமிநாதனின் மனைவியும் திருவெறும்பூர் தாலுகா ராக்போர்ட் டைம்ஸ் நிருபர் எஸ்.ரமேஷின் தாயாருமான எஸ்.சுசிலாதேவியின் திருவுருவப்பட திறப்பு விழா இன்று ( மே 5ம் தேதி ) காலை 11:30 மணியளவில் திருச்சி, திருவெறும்பூர், செல்வபுரம் இரண்டாவது தெருவில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. விழாவில் ராக்போர்ட் டைம்ஸ் வார இதழ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர்.லெக்ஷ்மி நாராயணன் கலந்துகொண்டு அன்னையின் திருஉருவ படத்தை திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் திருவெறும்பூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ கே.என்.சேகரன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கே.எஸ்.எம் கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு அம்மையாரின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். மேலும் இவ்விழாவில், திருச்சி பெரிய கடைவீதி ஜே.பி டைமண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் ஜெ.பிரேம் ஆனந்த், மூத்த பத்திரிகையாளர் சண்முகவடிவேலு, அரியமங்கலம் எஸ்.கே.சங்கர், தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி விவசாய அணித்தலைவர் பி.ஆண்டவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாவட்டத்தலைவர் பி.லெனின், தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் ஜெ.குருசாமி, சித்திரக்குடி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சி.ஜெயபாலன், தஞ்சை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.உலகநாதன், துவாக்குடி பெல் நகர் தொழிலதிபர் ஆர்.பி.எஸ்.சேட்டு,கிருஷ்ண சமுத்திரம் திமுக கிளைச்செயலாளர் பி.தனபால், திருச்சி ஒத்தக்கடை அன்னை ஸ்டிக்கர்ஸ் மேலாளர் ஆர்.அழகர்சாமி, அரியமங்கலம் பகுதி அமமுக செயலாளர் சீனி.ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள், என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்