திருச்சி காட்டூர் அருகேயுள்ள திடீர் நகர் காந்தி தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 74 ). இவரது மனைவி லீலாவதி.இவர்களுக்கு மகேந்திரன் சந்துரு என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லீலாவதி இறந்துவிட்டார். இதனால் நாகராஜ் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நாகராஜ் எலி மருந்ததை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதையடுத்து, நாகராஜை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நாகராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.