தமிழ்நாட்டில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் கடந்த சில வாரங்களாக தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில முறை டெல்லி சென்றும் கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டவர்களிடம் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில், அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளான பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று(மார்ச் 23) நிறைவடைந்தது. இதனையடுத்து அக்கட்சிகளுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி பாஜகவுக்கு 27 , பாமக 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 56 இடங்களை அதிமுக ஒதுக்கியுள்ளது.

Comments are closed.