பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பூ வியாபாாிக்கு அரிவாள் வெட்டு……
ஒருவா் கைது..2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு..
திருச்சி திருவானைக்காவல் சிங்கபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 37). இவர் ஸ்ரீரங்கம் மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று ( 27.09.2023 ) அதிகாலை மாணிக்கம்பிள்ளை தெரு அருகே கதிர்வேல் சென்றபோது, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவரை சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த கதிர்வேலை அப்பகுதி மக்கள் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் இந்த வழக்கில் தொடா்புடைய ரங்கராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். சுரேஷ் மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரைகாவல்துறையினா் தேடி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.