Rock Fort Times
Online News

அரசியலுக்கு வந்து விட்டாலே இதுவரை தோண்டப்படாத விஷயங்களை எல்லாம் தோண்டுவார்கள்… விஜய் விசயத்தில் அண்ணாமலை கருத்து..!

நடிகர் மற்றும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது அரசியல் வட்டாரத்திலும், திரையுலகிலும் பரபரப்பினை கிளப்பியுள்ளது. இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலையி டம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், “நடிகர் விஜய்யின் மனைவி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் டிசம்பர் மாதம் மனுத்தாக்கல் பதிவு செய்து இருக்காங்க. இன்னைக்கு அது வெளியே வந்து இருக்கு. இது மூன்று பேர்களுக்கு இடையிலான பிரச்சனையாக தான் பார்க்கிறேன். நடிகர் விஜய், அவரின் மனைவி மற்றும் நீதிமன்றம். விஜய்யோட அரசியல் கருத்துக்களுக்கு பதில் அளிக்க நான் தயாராக இருக்கிறேன். அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை விஷயத்தில் தலையிட விரும்பவில்லை. அவர்களுக்கு அமைதி கிடைக்கட்டும். அரசியலுக்கு வந்துட்டாலே இதுவரை தோண்டப்படாத விஷயங்களை எல்லாம் தோண்டுவார்கள். அது விஜய்க்கும் இருக்கும். அரசியலுக்கு வரும்போதே இதெல்லாம் அவருக்கும் தெரிஞ்சு இருக்கும். இதை அவர் கடந்து தான் போகனும். இதனை தாண்டித்தான் வரனும். இதையெல்லாம் பார்த்த பிறகும் மக்கள் அவரை ஏற்றுகொள்வார்களா, இல்லையா என்பதை இந்த தேர்தல் முடிவு செய்யும். இந்த விஷயத்தை பாசிட்டிவ், நெகட்டிவ் என்று சொல்ல விரும்பவில்லை. நியாயம், தர்மத்தை தாண்டிதான் அவர் பயணம் செஞ்சு ஆகனும். தனிப்பட்ட வாழ்க்கைல இருக்கக்கூடிய பிரச்சனையாக தான் பார்க்கிறேன். இதில் நான் இந்த நேரத்தில் விமர்சனத்தை வைத்து அநாகரிகமாகவோ, அரசியல்படுத்தவோ நான் விரும்பவில்லை”. இவ்வாறு  அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்