Rock Fort Times
Online News

மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் அரசியலமைப்பு சட்டங்கள் இருக்காது- அருண் நேருவை ஆதரித்து ஆ.ராசா பேச்சு…!

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து, திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.களத்தூர் கிராமத்தில் வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த போது, முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியோ, மோடியோ வெளியே வராத நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் கொரோனா பெருந்தொற்று, சென்னை பெரும் வெள்ளம், ஊதாரித்தனமாக எடப்பாடி செலவு செய்த 5 லட்சம் கோடி ரூபாய் கடன் என மூன்று சவால்களையும் எதிர்கொண்டார். பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி
ரூ.4 ஆயிரம் வழங்கினார். அதேபோல், மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். சாதத்தையும், சாம்பாரையும் கொடுத்து மதிய உணவு திட்டத்தை காமராஜ் செயல்படுத்தினார். அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர், காயையும், பருப்பையும் போட்டு சத்துணவு என்று ஆக்கினார். ஆனால் வாரத்தின் 7 நாட்களிலும் முட்டை கொடுத்து உண்மையான சத்துணவாக மாற்றியவர் கலைஞர் கருணாநிதி. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் காலை சிற்றுண்டியையும் வழங்கி வருகிறார் . குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போல கடந்த 10 ஆண்டுகளாக மோடி எதையும் செய்யவில்லை. மோடி சொல்கிறார் நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் இருக்காது. ஒரே மதம், ஒரே மொழி அதுவும் இந்தி தான் இருக்கும், ஒரே உணவு, ஒரே உடை, ஒரே தேர்தல் என்று சொல்கிறார். அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டங்கள் இருக்காது. எனவே, இந்த தேர்தலில் மத்திய பாஜக அரசுக்கு பாடம் புகட்டிட பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அருண் நேருவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு ஆராசா பேசினார். இதேபோல அரும்பாவூர், லாடபுரம், செட்டிக்குளம், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பிரச்சாரம் செய்து திமுக வேட்பாளர் அருண்நேருவிற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்தின்போது அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அரும்பாவூர் உள்ளிட்ட பல ஊர்களில் கலந்து கொண்டனர். அருண்நேருவின் அம்மா பிறந்த ஊர் அரும்பாவூர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரச்சாரத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், எம்.எல்.ஏ.பிரபாகரன், மாநில விவசாய தொழிலாளர் அணிச் செயலாளரும், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான அன்னியூர் சிவா, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், எஸ்.அண்ணாதுரை, ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் எம்.ராஜ்குமார், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.நல்லதம்பி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், அ.அப்துல்கரீம், ஆர்.அருண், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் கோபாலபுரம் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று ஆதரவு திரட்டினர்.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 940

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்