Rock Fort Times
Online News

மனைவி கண் முன்னே கணவன் விபத்தில் பலி…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வடுகன் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (36). இவரது மனைவி அனிதா( 31).  இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சுப்பிரமணி தன் குடும்பத்துடன் தாயுடன் திருச்சியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் இவரது மகளுக்கு விசேஷம் நடைபெற இருந்த நிலையில் மனைவி, மகள் மற்றும் தாயை சொந்த ஊரான ராசிபுரத்திற்கு நேற்று மாலை காரில் அனுப்பி விட்டு காரை பின் தொடர்ந்து சுப்பிரமணி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். உப்பிலியபுரம் அருகே உள்ள முருங்கப்பட்டி பகுதியில் செல்லும் போது வாழப்பாடியில் இருந்து எதிரே வந்த கார், சுப்பிரமணி மீது மோதியது. இதில் சுப்பிரமணி தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தார். இதனைப் பார்த்து பதறி துடித்த அனிதா, சுப்பிரமணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் அனிதா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாழப்பாடி சேசன் தெருவை சேர்ந்த கார் டிரைவர் பரத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்