Rock Fort Times
Online News

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள்? இன்று(பிப்.28) பேச்சுவார்த்தை…!

திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்து இன்று( பிப்.28) பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளதாக கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அந்தவகையில், திமுக, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அதில், இந்த முறை கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் கேட்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, காங்கிரஸ் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று (பிப்.27) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டணி குறித்து பேசிய அவர், “திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. அப்போது எத்தனை தொகுதிகள் என்பது குறித்து முடிவு செய்யப்படும். அதன் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்