நேபாள நாட்டை சேர்ந்தவர் சேகர்ராய் (வயது 37). இவர் திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு அந்த ஓட்டலின் மொட்டை மாடியிலேயே அறை ஒதுக்கப்பட்டு அங்கு தங்கி இருந்தார். நேற்று முன்தினம் ( 28.05.2023 ) நள்ளிரவு சேகர்ராய் மதுபோதையில் மாடியில் இருந்து கீழே இறங்கியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.