திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஓலப்பாளையத்தில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்ஸும், காரும் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த கோர விபத்தில் சந்திரசேகர்(60), சித்ரா(57) , இளவரசன்(26), அரிவித்ரா(30) மற்றும் 3 மாத பெண் குழந்தை ஆகிய 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று பஸ்ஸின் அடியில் சிக்கி இருந்த காரை மீட்டனர். பின்னர் படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திருப்பூரை சேர்ந்த சந்திரசேகர் – சித்ரா தங்களது 60வது திருமண நாளுக்காக திருக்கடையூர் சென்று திரும்பிய போது விபத்தில் சிக்கிக்கொண்டது தெரிய வந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.