Rock Fort Times
Online News

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உயா்நீதிமன்றம் அனுமதி….

தமிழக மின்சார துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. சமீபத்தில் அவரது சகோதரர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடந்தது . இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை போன்ற இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 17 மணி நேரம் நீடித்த இந்த சோதனைக்குப் பிறகு அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்த குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தமிழக மருத்துவ குழு அறிக்கையில் நம்பிக்கையில்லை என அமலாக்க துறை வாதம் செய்திருந்தது. மேலும், செந்தில் பாலாஜி விவகாரத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு பரிசோதிக்க வேண்டும் என அமலாக்க துறை புதிய மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாாித்த நீதிபதிகள் அமைச்சா் செந்தில் பாலாஜியை காவோி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்து தீா்ப்பளித்தனா். மேலும் அமலாக்கத்துறை மருத்துவக்குழுவும் சிகிச்சையை ஆராயலாம் என்று உத்தரவிட்டனா். செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவுக்கு அமலாக்கத்துறை அதிகாாிகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த மனு மீதான விசாரணையை வருகின்ற 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனா்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்