கோடை வெப்பம் தொடங்கியதை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் சிரமம்மின்றி நடக்க அனைத்து இடங்களிலும் தரைவிரிப்பு விரிக்கப்பட்டுள்ளது, மேலும் கடந்த வருடமே இனி வருடம் தோறும் கோடை வெப்பத்தின் தாக்கத்தில்லிருந்து பக்தர்களை காக்கும் பொருட்டு பக்தா்களுக்கு மூலிகை நீர்மோர் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்திரவின்பேரில்,தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி இந்த ஆண்டு இன்று முதல் துரை பிரகாரத்தில் கட்டணம் மில்லா வரிசையிலும், கொடி மரம் அருகில் கட்டண தரிசன வரிசையிலும் ,சுமார் 5000 பக்தர்களுக்கு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை நீர்மோாினை கோடை காலம் முழுவதும் வழங்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை கோவில் ஆணையர் திரு செ.மாரிமுத்து பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தார். மேலும் கண்காணிப்பாளர் திரு மு.கோபலகிருஷ்ணன் , உதவி மேலாளர் திருமதி தி.சண்முகவடிவு, அர்ச்சகர் சுந்தர்பட்டர் ஆகியோா் உடனிருந்தனா்.கோடை காலம் முழுவதும் உபயமாக மூலிகை நீர் மோர் வழங்க திருச்சி வேதா பால் நிறுவனர் திரு .ரமேஷ் முன் வந்துள்ளார் .
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Prev Post