சென்னையில் பெய்த பலத்த மழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், பெசன்ட் நகர், அடையாறு, மந்தைவெளி, பட்டினப்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் நள்ளிரவு இடி, மின்னலுடன் கூடிய கன மழை கொட்டித் தீர்த்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.மழை காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் ஒருமணி நேரம் பெய்த பலத்த மழையால் சென்னையில் விமானம் புறப்பாடு மற்றும் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 7 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. ஒரு விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 8 விமானங்கள் தாமதம் ஏற்பட்டது. குறித்த நேரத்தில் விமானங்களின் புறப்பாடு இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதிப்பட்டனர்.
Comments are closed.