சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் கருங்கல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 144 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மேட்டூர் மாதையன்குட்டை ஜீவா நகரை சேர்ந்த ராஜா (51) என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். இவர் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை தனது அறைக்கு அழைத்து தினமும் கை, கால்களை அமுக்கிவிட்டு தலையை மசாஜ் செய்து விடுமாறு வற்புறுத்தி உள்ளார். இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கூடத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் தலைமை ஆசிரியர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனை தொடர்ந்து பெற்றோா்கள் தலைமை ஆசிாியா் ராஜாவை கைது செய்யக்கோரி மேட்டூரில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த மேட்டூர் ஆர்.டி.ஓ தணிகாசலம், தாசில்தார் முத்துராஜா, டி.எஸ்.பி.மாரிமுத்து, கொளத்தூர் வட்டார கல்வி அலுவலர் சின்னராசு ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் சமாதானம் அடைந்த பெற்றோர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். முன்னதாக கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி ராஜாவை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

Next Post
Comments are closed, but trackbacks and pingbacks are open.