Rock Fort Times
Online News

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஹரிஹரன் த.மா.கா.விலிருந்து அதிரடி நீக்கம்…!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னையில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். 11 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடந்தது. அப்போது, போலீசார் பிடியில் இருந்து தப்பியோடிய கொலையாளி திருவேங்கடம் என்கவுண்ட்டர் முறையில் போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டார். விசாரணை முடிந்து 10 கொலையாளிகளும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில், கொலையாளிகளுக்கு ரூ,50 லட்சத்தில் இருந்து ரூ,1 கோடி வரை பணம் கைமாறியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. கொலையாளி அருளின் வங்கி கணக்கில் இருந்து ரூ,50 லட்சம் பெண்ணின் கணக்கிற்கு செலுத்தப்பட்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மலர்கொடி (45), தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹரிஹரன், திமுக பிரமுகரின் மகன் சதீஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி மலர் கொடியை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதேபோல, ஹரிஹரன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ் மாநில காங்கிரஸ் இயக்க மாநில மாணவரணி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட கே.ஹரிஹரன், இயக்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் இன்று(18-07-2024) முதல் த.மா.கா வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

யார் இந்த தேவதை ! ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்..

1 of 841

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்