Rock Fort Times
Online News

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்- 40 பேர் பலி; 750 பேர் படுகாயம்…

பாலஸ்தீனத்தில் இருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது திடீரென ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே போர் மூண்டுள்ளது. காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் போர் அறிவிப்பை இஸ்ரேல் பிரதமர் வெளியிட்டார். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 40 பேர் பலியாகி உள்ளதாகவும், 750- க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளுக்கு இடையே போர் மூண்டுள்ளதால் வெடிகுண்டுகள் வெடிக்கும் சப்தம் தொடர்ந்து கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே போர் மூண்டிருக்கும் நிலையில் இஸ்ரேலில் இருக்கும் வெளிநாட்டினர் விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்பதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:- இஸ்ரேல் மீது நடந்த தீவிரவாத தாக்குதலை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். தாக்குதலில் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் மக்கள் குறித்து கவலை கொள்வதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இந்தியா உள்டப பல்வேறு நாடுகளும் கண்டனம் தொிவித்த வண்ணம் உள்ளன.

ஜனவரியில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்பு.. அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

1 of 916

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்