தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் மத்திய சங்க துணை பொதுச்செயலாளர் முருகன், திருச்சி மாவட்ட துணை ஆட்சியர் சரண்யாவிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது : தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் பேருந்து படிக்கட்டுகளில் நின்றுகொண்டு பயணம் செய்வதை தடை செய்துள்ளது. ஆனால், அரசு பேருந்துகளின் படிக்கட்டுகளில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள் நின்றும், தொங்கிக்கொண்டும் கால்கள் சாலையில் உரசும் நிலையில் பயணம் செய்கின்றனர். அப்போது சிலர் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால் ஓட்டுநர், நடத்துனர்கள் துறை ரீதியான மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், அரசு போக்குவரத்து கழகம், போக்குவரத்து போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. கோரிக்கை மனு அளிக்கும்போது சங்கத்தின் துணைத்தலைவர் பிரபு, மலைக்கோட்டை கிளைசெயலாளர் அரவிந்த்ராஜ், கிளைபொருளாளர் சாய்ராம், துணைசெயலாளர்கள் சுப்ரமணியன், குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.