Rock Fort Times
Online News

பூக்கடைக்காரரை அரிவாளால் வெட்டிய அதிமுக உறுப்பினா் மீது குண்டா் தடுப்பு சட்டம் பாய்ந்தது..

திருச்சி திருவானைக்காவல் ஆர்.எஸ். ரோடு பகுதியை சேர்ந்தவர் படையப்பா என்கிற ரங்கராஜ் (வயது 43). இவா் அதிமுக உறுப்பினா். இவர் கடந்த மாதம் 27-ம் தேதி ஸ்ரீரங்கம் சிங்கர் கோவில் தெருவை சோ்ந்த பூக்கடைக்காரர் ஒருவரை முன் விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து படையப்பா ரங்கராஜை கைது செய்தனர். இந்த நிலையில் கைதான ரங்கராஜ் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர் என விசாரணையில் தெரிய வந்தது. அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளா் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என்.காமினி ஐபிஎஸ் அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அந்த ஆணை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்