Rock Fort Times
Online News

மிடுக்கான உடைக்கு குட் பை – பக்தராகவே ஆஸ்கர் விருது பெற குளோபல் ஸ்டார்பயணம்

நாட்டு நாட்டு…’ பாடல் ஆஸ்கார் விருது பெற்ற குளோபல் ஸ்டார்’ ராம் சரண் எந்தவிதமான மிடுக்கான உடையுடன் செல்லாமல் சபரிமலை பக்தராகவே ஆஸ்கர் விருது பெற தனது பயணத்தை தொடர்ந்தார். குளோபல் ஸ்டார் ராம்சரண் நடித்துள்ள ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருது கிடைத்தது. “இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, ‘நாட்டு நாட்டு’ படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்ட ‘ஆர்ஆர்ஆர்’ குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்த ராம்சரண்பாடலை சிறப்பாக பாடிய ராகுல் சிபில்கஞ்ச் மற்றும் காலபைரவா, நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் மற்றும் இந்த பாடலுக்கு உயிர்கொடுத்த அனைவருக்கும் நன்றியை பரிமாறிக் கொண்டார். “நாட்டு நாட்டு’ பாடல் ஒரு உலகளாவிய கொண்டாட்டமாக மாறியுள்ளது. சிறந்த கதை மற்றும் சிறந்த பாடல் மொழி மற்றும் எல்லைகளை கடந்து வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது. இந்தப் பாடல் இனி எங்களின் பாடல் அல்ல, ‘நாட்டு நாட்டு’ இனி பொதுமக்களுக்கும் அதை ஏற்றுக்கொண்ட அனைத்து வயது மற்றும் கலாச்சாரங்களை சேர்ந்தவர்களுக்கும் சொந்தமானது. இந்தியாவிற்கு இது ஒரு சிறந்த தருணம் என்று பெருமிதம் கொண்ட ராம்சரண் சபரிமலை பக்தராகவே காலில் செருப்பு அணியாமல் பக்தி சிரத்தையுடன் ஆஸ்கார் விருது பெற பயணத்தை தொடர்ந்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்