திருச்சியில் வழக்கறிஞர்கள், ஊழியர்களுக்கு இலவச தியான பயிற்சி…!
நீதிபதிகள் பாபு, மீனாசந்திரா தொடங்கி வைத்தனர்
திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்களுக்காக இலவச தியான பயிற்சி தொடங்கியது. இந்த தியான பயிற்சி 3 நாட்கள் நடக்கிறது.
இதனை மாவட்ட நீதிபதி கே.பாபு மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி என்.எஸ்.மீனா சந்திரா ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.
இதில், வக்கீல் சங்க நிர்வாகிகள் முல்லை சுரேஷ், சசிகுமார், சிவகுமார், விஜயநாகராஜன் தியான பயிற்சியாளர்கள் பழனியப்பன், ரமணி, அரசு வழக்கறிஞர் சவரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்படுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி. வெங்கட் செய்திருந்தார். இந்த தியான பயிற்சி நாளை (புதன்கிழமை) வரை நடைபெறுகிறது. இந்நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் நீதி மன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர் . இந்த தியான பயிற்சியின் மூலம் மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவை நீங்கும். ஞாபகசக்தி அதிகரிக்கும். ஆகவே,இந்த தியான பயிற்சியில் வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.