தமிழகத்தில் 4,500-க்கு மேற்பட்ட மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீர், ஒயின் ஆகிய உயர்ரக மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீர், ஒயின் விலை குவாட்டருக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.320 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது
Comments are closed, but trackbacks and pingbacks are open.