Rock Fort Times
Online News

அரசு ஆரம்ப சுகாதார நிலைய வாளாகத்தில் தீ- ஊழியா் உயிரிழப்பு…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரைச் சேர்ந்தவர் கலையரசன் (28) இவர் மரவனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு ஊழியராகவும், கே. பெரியபட்டி ஊராட்சியில் தற்காலிக அடிப்படையில் தூய்மை பணியாளராகவும் வேலை பார்த்து வந்தார். கடந்த 26 ம் தேதி அவரை மணப்பாறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு வரச் சொல்லி உள்ளனர். அதன்படி பணிக்கு வந்த கலையரசன் மருந்து மாத்திரைகளை எரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரின் சட்டையில் திடீரென தீப்பிடித்து எாிந்தது. அங்கு பணியில் இருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனடியான அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தீக்காயம் அதிக அளவில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கலையரசன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு உதவிட வேண்டும் என்று அவரது தந்தை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்