Rock Fort Times
Online News

இரும்பு கடையில் தீ விபத்து

மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு சாலையில் பழைய இரும்பு கடை செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட பழைய இரும்பு வியாபாரிகள் கடை வைத்து நடத்தி வருகின்றனர். இங்கு காலியிடத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த பழைய கழிவுகளிலிருந்து திடீரென்று புகை வர ஆரம்பித்த சிறிது நேரத்தில் கழிவு பொருட்கள் முழுவதும் எரியத் தொடங்கியது. அப்பகுதி முழுவதும் கருமூட்டமாக புகைகள் எழுந்ததால் அக்கம் பக்கம் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தீ அப்பகுதி முழுவதும் பரவி இருந்ததை கண்ட பொதுமக்கள் உடனடியாக மேட்டுப்பாளையம் காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனா். மேலும் தீ விபத்துக்கான காரணத்தை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்