Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் விடுபட்ட மகளிருக்கு 3 மாதங்களில் உரிமைத் தொகை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த திமுக, மகளிருக்கு மாதம்தோறும் ரூ. 1000 உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி,தற்போது தகுதியுள்ள பெண்கள் உரிமை தொகையை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், அந்த பட்டியலில் விடுபட்டோர் தங்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகுதியுள்ள மகளிர்க்கு இன்னும் 3 மாதத்தில் உரிமை தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தெரிவித்த உரிமைத்தொகை வழங்குவது குறித்த கருத்தை உறுதிப்பட தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட வெற்றிலைமுருகன்பட்டி,அல்லாளபேரி ஆகிய பகுதியில் ரூ. 9.45 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடைகளை மக்களின் பயன்பாட்டிற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று திறந்துவைத்தார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,”மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற அதிகமானோர் மனு அளித்துள்ளனர். இன்னும் 3 மாதங்களில் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உதவித்தொகை கிடைக்கும்வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்